Mitchell Starc sets worst record in odi cricket / ஒரே ஓவரில் 28 ரன்கள் - ஸ்டார்க்கின் மோசமான சாதனை
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது. பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இப்போட்டியில் 50 ஆவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என 28 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய பவுலர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.இதற்க்கு முன்னதாக ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து சைமன் டேவிஸ், கிரேக் மெக்டெர்மாட், சேவியர் டோஹெர்டி, ஆடம் ஜாம்பா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இந்த மோசமான சாதனையை கைவசம் வைத்திருந்தனர்.6️⃣▪️6️⃣6️⃣6️⃣4️⃣Incredible final over hitting from Liam Livingstone ??? #ENGvAUS ?? | @liaml4893 pic.twitter.com/qfEDxOM88N




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
