தேவரா படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் மாரடைப்பால் மரணம் / Jr NTR's Fan Dies Due To Heart Attack While Watching Devara

  மாலை மலர்
தேவரா படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் மாரடைப்பால் மரணம் / Jr NTRs Fan Dies Due To Heart Attack While Watching Devara

ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.தேவராபடம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரசிகர்களுக்காக தேவரா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்து கொண்டிருந்த மஸ்தான் வாலி தியேட்டரிலேயே மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை