சலூன் கடையில் 'ஹெட் மசாஜ்' செய்து கொண்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்-Tragedy happened to a person who had a 'head massage' at a salon shop.. Shocking incident
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பார்பர் ஷாப்பில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட 30 வயது இளைஞர் பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரியை சேர்ந்த ராஜ்குமார் என்ற 30 வயது நபர் கடந்த 2 மாதங்கள் முன்பு வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் சலூனில் இலவசமாக ஹெட் மசாஜ் செய்துகொள்ள முற்பட்டுள்ளார். அந்த பார்பர், ராஜ்குமாரின் தலையை ஹெட் மசாஜ் என்ற பெயரில் கடுமையாக மீண்டும் மீண்டும் திரும்பியுள்ளார்.இதனால் அசவுகர்யமாக உணர்ந்த ராஜ்குமார் அதன்பின் வலியை கண்டுகொள்ளாமல் வீடு திரும்பி சாதாரணமாக வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார். தனது உடலில் எதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து உடனே மருத்துவமனைக்குச் சென்றார். ராஜ்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். ஹெட் மசாஜ் விவரத்தை அறிந்த மருத்துவர்கள் ராஜ்குமாரின் கழுத்து கடுமையாக திருப்பப்பட்டத்தில் மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து ரத்தம் உறைதலை சரி செய்ய கடந்த 2 மாத காலமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் வல்லுநர்கள் அல்லாமல் ஹெட் மசாஜ் செய்து கொள்வதில் உள்ள ஆபத்தைக் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
