முதல் டி20 போட்டி: அயர்லாந்தை எளிதில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா/ IREvsSA 1st T20 South africa beats ireland by 8 wickets
அயர்லாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் சேர்த்தது. கர்ட்டிஸ் காம்பர் 36 பந்தில் 49 ரன்களும், நீல் ராக் 28 பந்தில் 37 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பாட்ரிக் க்ருகெர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டல் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ரீசா ஹென்ரிக்ஸ் 33 பந்தில் 51 ரன்கள் விளாசினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 17.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரு அணிகளுக்கும் இடையலிான 2-வது போட்டி நாளை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் அபுதாயில் நடக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
