இளம் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் காயம்: இரானி கோப்பை, ரஞ்சி டிராபியை தவற விடுகிறார்/ Sarfaraz Khan's Brother Musheer khan Scored 181 vs Shubman Gill And Co Involved In Road Accident
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருந்த இந்தியா "ஏ" அணிக்கெதிராக சதம் விளாசினார்.இரானி கோப்பையில் மும்பை- ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருக்கிறார்.இவர் இரானி கோப்பையில் விளையாடுவதற்கான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.இந்த விபத்தில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரானி கோப்பையில் மும்பை அணிக்கெதிராக அவர் விளையாட முடியாது. மேலும், அக்டோபர் 11-ந்தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பையின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சுமார் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.இரானி கோப்பைக்கான மும்பை அணியுடன் முஷீர் கான் லக்னோ செல்லவில்லை. அவரது தந்தையுடன் அசாம்காரில் இருந்து லக்னோவிற்கு தனியாக பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
