ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்- Ajith is participating in a car race in Europe
நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் என நமக்கு தெரிந்த விஷயம் தான். பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையவர்.இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார் என்றும் தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும் ஐரோப்பாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 99 GT3 கப் பிரிவில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அஜித் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
