சாரி.. நோ கமெண்ட்ஸ் சொன்ன ரஜினி- Rajinikanth comment tirupati laddu issue

  மாலை மலர்
சாரி.. நோ கமெண்ட்ஸ் சொன்ன ரஜினி Rajinikanth comment tirupati laddu issue

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை இருக்கு. அதிக திரையரங்குகளில் வெளியாவதற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார். இதனிடையே திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சாரி... நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தார்ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.இப்படத்தில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரிய், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை