தேவரா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் விவரம்.../ Devara Part 1 collects Rs 172 crore worldwide on day 1

  மாலை மலர்
தேவரா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் விவரம்.../ Devara Part 1 collects Rs 172 crore worldwide on day 1

ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்இந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தேவராவின் சுனாமியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்ற வசனத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை யுவாசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை