இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம்..-Hezbollah leader Hassan Nasrallah killed in Israeli airstrike
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடந்தி வருகிறது. ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் லெபனான் பொதுமக்கள் உட்பட சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர், இரு குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்தது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொள்ளப்பட்டனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஒரே வாரத்தில் லெபனானில் 700 க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். 118,000 க்கும் அதிகாமாக லெபனான் மக்கள் போர் பதற்றத்தால் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே [Dahiyeh] பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு குடியிருப்பு கட்டடங்கள் மீதும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா [64 வயது] உள்ளிட்டோரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.⚠️ BREAKING: The Israeli Air Force has just BOMBED the main HeadQuarters of Hezbollah in Lebanon.THIS IS HUGE. pic.twitter.com/57UrFJc2R7இந்நிலையில் இந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. Hassan Nasrallah will no longer be able to terrorize the world.The Israeli @IDF confirms that Hassan Nasrallah, the leader of the Hezbollah terrorist organization and one of its founders, was eliminated yesterday, together with Ali Karki, the Commander of Hezbollah's Southern Front, and additional Hezbollah commanders.Nasrallah will no… pic.twitter.com/aThduf0bweகடந்த 1992 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அப்போதைய ஹிஸ்புல்லா தலைவர் அபபாஸ் அல் முசாவி உயிரிழந்தபோது தலைவர் பொறுப்பேற்ற ஹசன் நஸ்ரல்லா 32 வருடங்களாக ஹிஸ்புல்லா தலைவராக இருந்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இரண்டாம் லெபனான் [போரின் போது தாங்கள் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்ததாக அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே நஸ்ரல்லா உயிருடன் பொதுவெளியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தெற்கு பெய்ரூட்டில் நேற்று நடந்த தாக்குதல்களில் நஸ்ரல்லாவின் மகள் ஜைநப் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
