மாதம்பட்டி ரங்கராஜின் புதிய படம்.. வெளியான சூப்பர் டீசர் / Miss Maggi Teaser Released

  மாலை மலர்
மாதம்பட்டி ரங்கராஜின் புதிய படம்.. வெளியான சூப்பர் டீசர் / Miss Maggi Teaser Released

தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நீண்ட காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இடையில், உணவுத் துறையில் தனி கவனம் செலுத்தி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.இந்த நிலையில், மாதம்பட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார். "மிஸ் மேகி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் லதா ஆர். மணியரசு இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை