ரத்தக் கறை உட்பட 200 சாட்சியங்கள்; கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு: ரசிகர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ரத்தக்கறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.ரசிகரான ரேணுகாசுவாமி, கொலை வழக்கில் கன்னட நடிகரான தர்ஷனும் அவரது தோழி பவித்ரா கவுடாவும் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது பெங்களூரு காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மொத்தம் 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு கீழமை நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 4) காவல்துறை தாக்கல் செய்தது. ரேணுகாசுவாமியின் கைப்பேசியில் பதிவான காணொளியும் சாட்சியங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் தன்னை அடிக்க வேண்டாம் என்று ரேணுகாசுவாமி கெஞ்சுவதாக உள்ளது.ஆட்டோ ஓட்டுநரான 33 வயது ரேணுகாசுவாமி கடந்த ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலத்திற்குக் கீழே பிணமாகக் கிடந்தார். நடிகர் தர்ஷனின் உத்தரவால் ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகத்தில் நடிகரின் தோழி பவித்ரா கவுடவைப் பாதிக்கும் காணொளியை ரேணுகாசுவாமி பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.ரேணுகாசுவாமி கொடூரமாக அடித்து, மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. ஒரு காது காணவில்லை. அவரது விதைப்பை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
