1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது நடிகர் திலகம் கணேசனும் , ஜெமினியும்
சென்னையில் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போதுதான் , அமர்க்களமான இந்த காட்சியைக் கிளிக் செய்திருக்கிறார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் அந்த நேரத்தில் நடிகர் திலகம் கணேசனும் சரி , ஜெமினியும் சரி எந்தப் படத்திலும் நாதஸ்வரக்கலைஞராக நடித்ததில்லை. இரண்டு பேரும் அந்தக் கல்யாணத்துக்கு வந்தபோது , அங்கே காருக்குருச்சி அருணாசலம் அவர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது... இரண்டு கணேசன்களுக்கும் காருக்குரிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர் .இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தார்கள். கச்சேரி முடிந்தவுடன் " அண்ணே அண்ணே நாதஸ்வரத்தக் குடுங்ஙண்ணே " என்று கணேசனும் ஜெமினியும் வாங்கிக் கொள்ள..இருவரும் கச்சேரி வித்வான்கள் போல் போஸ்பண்ண அங்கு வந்திருந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் தவில்காரரிடமிருந்து தவிலைக் கைப்பற்றி பந்தாவாக அமர ஒரே அமர்க்களம்தான்...கணேசன் அருகே காருக்குரிச்சி. இதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்துத்தான் கொஞ்சும் சலங்கையும் தில்லானா மோகனாம்பாளும் வந்தன. கொஞ்சும் சலங்கையில் ஜெமினி நாதஸ்வரத்தைப் பிடிக்க....அவருக்கு காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
