லெபனானில் பதற்றம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
துபாய், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்., 8 முதல், எல்லையில் மோதல் நீடித்து வருகிறது. கடந்த 27ல், இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா நடத்திய ராக்கெட் தாக்குதலில், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், லெபனானில் உள்ள நம் துாதரகம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:பிராந்தியத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை கருதி, லெபனானில் உள்ள அனைத்து இந்தியர்களும், அந்நாட்டுக்கு செல்ல திட்டமிடுபவர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெய்ரூட்டில் உள்ள இந்திய துாதரகத்துடன், தங்களது மின்னஞ்சல் வாயிலாக தொடர்பில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அவசரத்துக்கு, cons.beirutmea.gov அல்லது +961 7686 0128 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
