பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும்.வெண்கல பதக்கத்திற்கு நடந்த போட்டியில், இந்தியாவின் மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி தென் கொரியாவின் வோன்ஹோ லீ - யீ ஜென் ஜோடியை 16- 10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. மொத்தம் இரண்டு வெண்கல பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது.முதல் இந்தியர் ஏற்கனவே, துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனுபாகர் வெண்கலம் வென்றிருந்தார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.பிரதமர் வாழ்த்துபிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து பெருமைப்படுத்துகிறார்கள்! வெண்கலம் வென்ற மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மனுவைப் பொறுத்தவரை, அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம், இது அவரது சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இருவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
