கேரளாவை முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- அமித்ஷா
புதுடில்லி: நிலச்சரிவு ஏற்படும் , மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என கேரளாவை முன்கூட்டியே எச்சரித்தோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம். 7 நாளுக்கு முன்பே , ஜூலை 23ல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24,25 ல் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். 27 ல் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். 2014க்கு பிறகு இந்த அமைப்புக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. ஆபத்தான பகுதிகளில் மக்களை வெளியேற்றாமல் பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம். நிலச்சரிவு ஏற்படும் என தெரிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அமித்ஷா கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
