மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக முக்கியம்: ஜப்பானில் ஜெய்சங்கர் பேச்சு
டோக்கியோ: 'மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக நீண்ட காலம் கடந்துவிட்டன. தற்போது அவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.ஜப்பான் எடோகாவாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்த. பின்னர் ஜெய்சங்கர் பேசியதாவது: இயற்கையோடு இயைந்து வாழ்வது எப்படி என்பதை வலியுறுத்தியவர் காந்தி. அமைதி மற்றும் அகிம்சை பற்றிய காந்தியின் சிந்தனைகள் பெரியது. இன்று உலக நாடுகள் பல மோதல்களை எதிர்கொண்டு வருகிறது. டோக்கியோவில் இந்திய சமூகத்தினர் வசித்து வரும் பகுதியில் உள்ள பூங்காவிற்கு விரைவில் 'காந்தி பூங்கா' என பெயரிடப்படும். தேச தந்தை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆசியாவின் பிற பகுதிகள் சுதந்திரமடைந்தன. இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று நாம் கூறும்போது, உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. காந்தியின் சாதனைகள் மிக நீண்ட காலம் கடந்துவிட்டன. காலப்போக்கில், தற்போது அவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் மக்கள் காந்தியை தேசத்தின் தந்தையாக நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, எடோகாவாவில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார்.சந்திப்புடோக்கியோவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
