இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை
டாகா: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து அந்நாட்டு யூடியூபர் ஒருவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என இணையதளவாசிகள் கூறியுள்ளனர்.வங்கதேசத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்குள் எப்படி அத்துமீறி, சட்டவிரோதமாக நுழைய முடியும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றை, தனது சேனலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய எல்லையில் உள்ள வங்கதேசத்தின் சுனம்கன்ஜ் மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.அதில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய மக்களுக்கு எந்த ஆவணங்களும், விசாவும் அல்லது பாஸ்போர்ட்டும் தேவையில்லை. இந்தியாவிற்கு செல்லும் பாதையை காட்டி, இதன் வழியாக சென்றால் பிஎஸ்எப் வீரர்களிடம் மாட்டி கொண்டு பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் எனக்கூறுகிறார்.மேலும், பிஎஸ்எப் முகாம்களை காட்டியதுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதற்கான வழி என சில சுரங்கப்பாதைகளை எடுத்துக்காட்டி உள்ளார். இந்த வழியாக சென்று நாட்டின் நற்பெயரை கெடுக்க வேண்டாம் என வங்கதேசத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த இணையதளவாதிகள், இதில் கவனம் செலுத்தி அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.'எல்லைப் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? ஒரு யூடியூபருக்கு வழி தெரிந்தால், அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வளவு காலம் எல்லைப் பாதுகாப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று அபர்ஜிதா தேஷ்பாண்டே என்ற இணையதளவாசி கேள்விஎழுப்பி உள்ளார்.பாஞ்சி என்பவர், ' சட்டவிரோதமாக வருபவர்களுக்கு விசாக்கள் அல்லது பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்கள் சுரங்கப் பாதையைக் கடந்தவுடன், பான் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டைகள் விற்கப்படுகின்றன. வாருங்கள் வந்து ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள்'என்று கூறியுள்ளார்.அமிர் ரஸா கான் என்பவர், வீடியோ வெளியிட்டது நல்லது; இப்போது நாம் பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும் எனக்கூறியுள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
