இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி வென்றது
கண்டி:இலங்கை அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் 2-0 என கைப்பற்றியது.டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. அந்த அணியின் குசல் பெரேரா நிலைத்து ஆடி அரை சதம் (53)அடித்தார். நிஷங்கா 32 ரன்களுக்கு அவுட் ஆனார். மெண்டிஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் மற்றும் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.162 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் ஓவரை எதிர்கொண்டபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.அதை தொடர்ந்து போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி,8 ஓவரில் 78 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 6.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் 2-0 என கைப்பற்றியது.ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 30 ரன்களும் கேப்டன் சூர்யகுமார் 26 ரன்களும் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
