ஒலிம்பிக் துப்பாக்கி சூடு: நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில், இந்திய வீரர் அர்ஜூன்நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடந்து வருகிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 3வது நாளாக இன்று (ஜூலை 29) நடந்த ஆடவர் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் 4வது இடம் பெற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.7வது இடம்10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் தோல்வி அடைந்தார். 8 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 145.3 புள்ளிகளுடன் 7வது இடத்தை ரமிதா ஜிண்டால் பிடித்தார்.3வது இடம் பிடித்த இந்தியா 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் தகுதிச் சுற்றில் 3வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. மனு பாகர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. பேட்மிண்டன்2 வது லீக் போட்டியில் லக்ஷயா சென் வெற்றிஒலிம்பிக் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் போட்டியின் 2 வது லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் பெல்ஜியம் வீரர் ஜூலியன் கராக்கியை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.பதக்க பட்டியல் சீனா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கத்தையும் வென்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் கொரியா 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கமும் வென்றுள்ளது. இந்தியா ஒரு வெண்கல பதக்கத்துடன் 22வது இடத்தில் நீடிக்கிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
