காஷ்மீருக்குள் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவல்? தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 600 கமாண்டோக்கள், காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா மற்றும் முன்னாள் டிஜிபி ஷேஸ் பால் வைத் ஆகியோர் கூறியுள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.3 குழுக்களாகஇது தொடர்பாக அம்ஜத் அயுப்மிர்சா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற குழு (எஸ்எஸ்ஜி) அதிகாரி அதில் ரெஹ்மானி, காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறார். எஸ்எஸ்ஜி பட்டாலியனின் 600 கமாண்டோக்கள் குப்வாரா உள்ளிட்ட பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர். உள்ளூர் ஜிகாதி குழுவினர், அவர்களுக்கு உதவுகின்றனர். பூஞ்ச், உரி, ரஜோரி ஆகிய பகுதிகளில் தலா 150 பேர், 3 குழுக்களாக பிரிந்து ஊடுருவி உள்ளனர்.நோக்கம்எஸ்எஸ்ஜி குழுவில் லெப்டினன்ட் காலினல் அந்தஸ்தில் உள்ள ஷாகித் சலீம் ஜன்ஜூவா, தற்போது காஷ்மீரில் ஊடுருவி உள்ளார். இவர், தாக்குதல் நடத்தும் திட்டங்களை தயாரித்து வருகிறார். இந்திய ராணுவத்தின் 15 கார்ப்ஸ் பிரிவினருடன் மோதுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.தயார்காஷ்மீருக்குள் ஊடுருவ எஸ்எஸ்ஜி குழுவின் இரண்டு பட்டாலியன்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் சாமானிய மக்கள் போல் ஊடுருவி உள்ள இவர்கள், மக்களுடன் கலந்து மறைந்துள்ளனர். தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். அம்மாநில முன்னாள் டிஜிபி ஷேஸ் பால் வைத்தும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.தேடுதல் பணி தீவிரம்இதனையடுத்து காஷ்மீரில், இந்திய ராணுவத்தினர் கிராமம், கிராமமாக தீவிரமாக கமாண்டோக்களை தேடி வருகின்றனர். இந்த பணியை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. தேடும் பணி குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவ தளபதிக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
