விபத்து செவ்வாய்: நிலச்சரிவில் புதைந்த பரிதாபம், ரயில் விபத்தில் சிக்கிய பலர், கிணறு வெட்ட போன உயிர்
இன்று (ஜூலை-30) செவ்வாய்க்கிழமை விடியும் போது பல துயரச்சம்பவங்களை இயற்கை உதிர்த்து விட்டு சென்றிருக்கிறது. விபத்து செவ்வாயில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வயநாடு பகுதிக்குட்பட்ட மேப்பாடி. சூரல்மலை, குண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டது. 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிர்ப்பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது. இங்குள்ள ஒரு பாலம் இடிந்ததால் பலர் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். விமான படை விரைந்துள்ளது. கோவை, நீலகிரி, மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வால்பாறையில் சோலையாறு அணை இடதுகரை என்ற பகுதியில் மண் சரிந்து ராஜேஸ்வரி, பிரியா உயிரிழந்தனர்.ஜார்கண்ட் மாநிலத்தில் ஹவுரா- ஜிஎஸ்எம்டி ரயில் தடம் புரண்டதில் 6 பேர் காயமுற்றனர். தமிழகத்தில் விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் கிணறு தோண்டும் போது 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு விடிந்த விபத்து செவ்வாயில் கேரளாவில் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
