கேரள நிலச்சரிவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடிபிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், 'வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அறிந்து மிக கவலையுற்றேன். அன்பான ஒவ்வொருவரையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். கேரளாவுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும். மாநில முதல்வருடன் போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.காங்., எம்.பி., ராகுல்நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டு அறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளனர். பிரதமர் நிதியில் நிவாரணம் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வருத்தமளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணியை தீவிரப்படுத்த இரண்டாவது குழு ஏற்கனவே புறப்பட்டு சென்றுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாநிலச்சரிவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின்வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அனைவரையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்துவித உதவிகளையும் சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இந்த துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைவயநாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் பலர் மண்சரிவுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மண்சரிவுகளில் சிக்கியிருப்பவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ தமிழக பா.ஜ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும், அவர்களுக்கான இதர உதவிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
