வயநாடா? பயநாடா?: சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள்
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. நிலச்சரிவு ஏற்படும்போதெல்லாம் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடந்து வருகின்றன. 2006 முதல் இதுவரை ஏராளமான நிலச்சரிவுகளை வயநாடு கண்டிருக்கிறது. அதில் 10 நிலச்சரிவுகள் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 12 பேரும், 2019ல் 17 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் நிலச்சரிவின் போது காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை.தற்போது மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டிருந்தாலும், ஏராளமான வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வயநாடு மாவட்டத்தில் மழைக்காலம் வந்தாலே மக்கள் பயத்துடன் நாட்களை கடந்து வரும் பரிதாப நிலையில் உள்ளனர். இந்திய ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்டோருடன் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
