பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா
33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் சிறப்பாகத் தொடங்குகிறது.
பிரான்ஸ் நாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அங்கு நடைபெறுகிறது. அந்த பத்தாயிரம் பேரில் ஒருவராக இந்த வாய்ப்பை பெற்றார் இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா.
இலங்கையை சேர்ந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு பிரான்ஸ் வந்துள்ளார். தொழில்முறை செஃப். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த பகெத் (Baguette) உருவாக்கத்துக்கான போட்டியில் அவர் முதலிடம் பிடித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் ஜோதி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. அங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு இந்த ஜோதி கொண்டுவரப்பட்டுள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
