வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது, வட அமெரிக்காவில் ஆங்காங்கே உள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாகும். பேரவையில் தற்போது கிட்டத்தட்ட 62 தமிழ் அமைப்புகள் உறுப்புச் சங்கங்களாக உள்ளன. 2024-2026 ஆம் ஆண்டுக்கான செயற்குழுத் தேர்தல் அண்மையில் இடம் பெற்றது. பேரவையின் பேராளரும் நியூயார்த் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு. கதிர்வேல் குமாரராஜா அவர்கள் முதன்மைத் தேர்தல் அலுவலராகப் பணியாற்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பேரவையின் தற்போதைய துணைத்தலைவர் திரு.விஜய் மணிவேல், துணைப்பொருளாளர் திரு. எழிலன் இராமராஜன் ஆகியோரின் தலைமையிலான பேரவை மேன்மை அணியினர் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்ச்சங்கங்களின் தமிழ்க்கலை, பண்பாடு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு, உள்ளூர் அரசாங்கத்தின் உதவித்தொகை பெற்றுத்தருவது, பண்பாட்டுத்தளத்தில் சிறப்புத் திறங்களை வெளிப்படுத்தும் மாணவர்களுக்குப் பரிசில் வழங்குவது, கல்விப்புலத்துக்கான மேம்பாட்டுத்துறை அமைப்பது, நிர்வாகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்துப் போட்டியிட்ட இந்த அணியினர் வெற்றி வாகை சூடியுள்ளனர். வெற்றி பெற்றவர்களின் விபரம் கீழே வருமாறு:
தலைவர்: திரு.விஜய் மணிவேல், மிசெளரி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்
துணைத்தலைவர்: திரு.எழிலன் இராமராஜன், அட்லாண்டா தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்
செயலாளர்: முனைவர் கபிலன் வெள்ளையா, நியூஜெர்சி தமிழ்ப்பேரவை நிறுவனத் தலைவர்
துணைச்செயலாளர்: திருமிகு ஜான்சிராணி பிரபாகரன், விஸ்கான்சின் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்
பொருளாளர்: திரு வள்ளிக்கண்ணன் மருதப்பன், கனடா தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர்
துணைப்பொருளாளர்: திருமிகு சுபா சுந்தரலிங்கம், போஸ்டன் தமிழ் அசோசியேசன் முன்னாள் துணைத்தலைவர்
நிர்வாக இயக்குநர்: முனைவர் பாரதி பாண்டி, கரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர்
நிர்வாக இயக்குநர்: திரு வெற்றிவேல் பெரியய்யா, சியாட்டில் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்
நிர்வாக இயக்குநர்: திரு ஷான் குத்தாலிங்கம், டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் முன்னாள் தலைவர்
நிர்வாக இயக்குநர்: திரு கார்த்திகேயன் பெருமாள், சான்பிராஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றப் பேராளர்
இளையோர் பிரதிநிதி: இளமிகு ஆர்த்திகா குமரேஷ், கனடியத் தேசியத் தமிழர் அவை
இளையோர் பிரதிநிதி: இளமிகு ரோஷன் ஸ்ரீனிவாசன், ரிச்மண்ட் தமிழ்ச்சங்கம்
வெற்றிபெற்ற இவர்கள் சான் ஆண்ட்டோனியோ நகரில் நிகழவிருக்கும் பேரவை ஆண்டுவிழாக்கூட்டத்தின் போது பொறுப்பேற்கவுள்ளனர்.
-வலைத்தமிழ் பன்னாட்டு செய்தியாளர்: முனைவர் மெய்.சித்ரா , ஆங்காங்




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
