தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு குறித்து நேற்று அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணித் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்படி, தற்போது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷப் பந்த்க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.
இதேபோல் மோசமான ஃபார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக வீரர்கள் ஒருவர் கூட இந்திய அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணியின் விவரம்: ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
