14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
விண்வெளியில் 14 கோடி மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து லேசர் சிக்னல் பூமிக்கு வந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
சுமார் 14 கோடி தொலைவில் விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு லேசர் சிக்னல் வந்தடைந்துள்ளது.
நாசா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சைக்கி 16 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இது செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ளது. சைக் விண்கலம் 'டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேசன்' தகவல் தொடர்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லேசர் தொடர்புகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்த லேசர் தொடர்பு தற்போதுள்ள ரேடியோ அலைகளை விட வேகமாகச் செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சைக்கி விண்கலத்தின் லேசர் தகவல்தொடர்புகள் சுமார் 14 கோடி மைல்கள் தொலைவிலிருந்து தரவுகளை அனுப்பியது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.
இதனை எட்டு நிமிடங்களில் பதிவிறக்கம் செய்ததாக, இதன் திட்ட இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.