அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி 65,960 இந்தியர்கள் முறையான அனுமதி பெற்று அமெரிக்கக் குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-மாண்டு நிலவரப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 4.6 கோடி பேர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 33.33 கோடியில் 14 சதவீதம் ஆகும்.மொத்த வெளிநாட்டவர்களில் 53 சதவீதம் அதாவது 2.45 கோடி பேருக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைத்துள்ளது.
அமெரிக்கக் குடியுரிமை பெற்றதில் மெக்சிகோ நாட்டவர் (1,28,878 பேர்) முதலிடத்தில் உள்ளனர். அடுத்தபடியாக இந்தியர்கள் (65,960 பேர்) உள்ளனர். இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் (53,413), கியூபா (46,913), டோமினிக் குடியரசு (34,525), வியட்நாம் (33,246), சீனா (27,038) ஆகிய நாடுகள் உள்ளன.அமெரிக்கக் குடியுரிமை பெற்றதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், இன்னும் 42 சதவீத இந்திய வம்சாவளியினர் அமெரிக்கக் குடியுரிமை பெற தகுதியற்றவர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு நிலவரத்தின்படி அமெரிக்காவில் பிறந்தவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.மெக்சிகோவில் அமெரிக்காவைச் சேர்ந்த 1,06,38,429 பேர் வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 28,31,330 அமெரிக்கர்கள் உள்ளனர். மூன்றாவது இடம்பிடித்துள்ள சீனாவில் 22,25,447அமெரிக்கர்கள் வசிக்கின்றனர்.
2023 நிதியாண்டு இறுதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமை கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4,08,000-ஆக இருந்தது. இருப்பினும் இது 2022 நிதியாண்டின் எண்ணிக்கையான 5,50,000 மற்றும் 2021 நிதியாண்டின் 8,40,000 மற்றும் 2020 நிதியாண்டின் 9,43,000 நிலுவை விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை கோரியதில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஜமைக்கா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
குடியுரிமைக்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
