குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டு துளைக்காத பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஜாக்கெட் 6 குண்டுகள் வரை தடுக்கக் கூடியது. 7.62 * 64 ஆர் ஏபிஐ குண்டுகளைக் கூட இந்த ஜாக்கெட் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “இந்தக்குண்டு துளைக்காத ஜாக்கெட் சண்டிகரில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சி பரிசோதனை முனையத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்த ஜாக்கெட் புதிய வடிவமைப்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது” என்று தெரிவித்துள்ளது.
கான்பூரில் உள்ள பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி அமைப்பு இந்த ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளது. எடை குறைந்த மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்காகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா பாதுகாப்புத் துறையில் சுயசார்பை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், ராணுவக் கட்டமைப்பை நவீனப்படுத்தியும் வருகிறது. அதன் நீட்சியாகவே தற்போது மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
