75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்து உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளது. வீடுகள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விமானச் சேவையும் பாதிப்படைந்தது.
வாகனங்கள் வழியிலேயே நீரில் மூழ்கின. கார், லாரி உள்ளிட்ட சிறிய பெரிய வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளும் வீடியோவாக வெளிவந்தன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1949-ம் ஆண்டுக்குப் பின்பு, அதிக அளவில் கனமழை பொழிந்துள்ளது எனப் பதிவாகி உள்ளது. இந்நிலையில், சர்வதேசப் போக்குவரத்து அதிகம் நடைபெறக் கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. விமானச் சேவை ரத்து, காலதாமதம் எனப் பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், விமான நிலையத்தின் முனையம் 1-ல் விமானச் சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும், விமானங்கள் தொடர்ந்து காலதாமதத்துடன் வந்து சேர்கின்றன. இதேபோன்று, சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.
துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்துக் காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 2 நாட்களாகப் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது.
துபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு இதுவரை 20 பேர் வரை பலியாகி உள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் மித முதல் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
