பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
பப்புவா நியூ கினியின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநரான, சசீந்திரன் முத்துவேல் சாதனை தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பப்புவா நியூ கினி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் நடந்த தீப விழாவிலே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, சிவகாசியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவருக்கான சாதனைத் தமிழன் விருதை பப்புவா நியூ கினி வாழ் இலங்கைத் தமிழரும், IBSU பல்கலைக்கழக நிறுவனத் தலைவருமான மாணிக்கம் நடேசலிங்கம் வழங்கியுள்ளார்.
ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், மேற்கொண்ட உயரிய சேவைகளுக்காக, அவருக்கு பப்புவா நியூ கினி நாட்டு அரசாங்கம்; பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வழங்கியுள்ளது.
அத்துடன் அண்மையில்; இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதுக்கும் அவர் தெரிவாகியுள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற தீப விழாவில்,பப்புவா நியூ கினி வாழ் தமிழ் மக்களும், தமிழ்ச் சங்கத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
