சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு.
அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருதுகளுக்கான பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணிச் சண்டைப்பயிற்சி இயக்குநர்களில் ஒருவர் அனல் அரசு ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகும் முன்னணிக் கதாநாயகர்களின் படங்களுக்குச் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழில் சிங்கம்-1, சிங்கம்-2, கத்தி, மெர்சல், பிகில் உள்படப் பல படங்களில் பணியாற்றியவர். அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களிலும் பணியாற்றி உள்ளார். அதேபோல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்- அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி, ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர், தபாங்-2, தபாங்-3, சுல்தான், ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான 'ஜவான்' போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, தானும் ஒரு இயக்குநராக 'பீனிக்ஸ் (வீழான்)' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
இவர் ஏற்கனவே பணியாற்றிய திரைப்படங்களுக்காகத் தமிழ்நாடு மாநில அரசு விருது, ஆனந்த விகடன் விருது, விஜய் டிவியின் விருது, தென்னிந்தியச் சர்வதேசத் திரைப்பட விருது, எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமி விருது, தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருது போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் பாலிவுட் பாட்ஷா'எ ன்றழைக்கப்படும் 'ஷாருக்கான்' நடிப்பில், 'அட்லி' இயக்கத்தில், 'அனிருத்' இசையில், அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்குச் சண்டைப்பயிற்சி இயக்குநராகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான விருதுகளையும் வென்றிருக்கிறார். சமீபத்தில் 'ஜவான்' திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுகள் 2024-லிலும், ஜீ சினி விருதுகள் 2024-லிலும் சிறந்த சண்டைப்பயிற்சி விருதுகளை வென்றுள்ளார்.
அனைத்திற்கும் உச்சமாக திரைப்படச் சண்டைப் பயிற்சித் துறைக்கு 'ஆஸ்கர் விருது' போன்ற ஒரு விருதான 'டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது'களுக்கான பட்டியலில் ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் 'ஜவான்' திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
