நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாக இஸ்ரோ ஆய்வில் தகவல்
சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது உறுதியாகியுள்ளது.
இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, ஐஐடி கான்பூர், ஐஐடி தான்பாத், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் இணைந்து நடத்திய ஆய்வில், நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பிலிருந்து ஒரு சில அடி ஆழத்தில் இருக்கும் பனிக்கட்டிகள், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகளை விட 5 - 8 மடங்கு பெரியளவில் உள்ளதாகவும், ஆகவே, தென் துருவப் பகுதி மேற்பரப்பை ஆழ்துளையிட்டு அவற்றை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப் பகுதியைத் துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
நிலவின் வட துருவப் பகுதிகளில், தென் துருவப் பகுதிகளில் இருப்பதை விட இருமடங்கு அதிகளவிலான நீர், பனிக்கட்டிகளாக உறைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதிகளில் சுமார் 38,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட வாயுக்கள் வெளியேற்றம், இந்தப் பனிக்கட்டிகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையே இஸ்ரோவின் தற்போதைய ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
