ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார்

தினமலர்  தினமலர்
ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார்

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது தயாரித்து, இயக்கி உள்ள படம் 'ரசவாதி'. இதில் அர்ஜூன்தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சரவணன், சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர், எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.

படம் பற்றி சாந்தகுமார் கூறியதாவது: இந்த படம் எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கொடைக்கானலில் வாழும் இளம் சித்த வைத்தியர் ஒருவருக்கு ஒரு பிரச்னை வருகிறது. அதனை அவன் தனக்கிருக்கும் சித்த வைத்திய அறிவை கொண்டு எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. ஐடி வேலையை விட்டுவிட்டு மலைப்பகுதிக்கு வரும் ஒரு பெண்ணை அவன் சந்திப்பதும் அதன் காரணமாக வரும் பிரச்னைகளும்தான் திரைக்கதை. ரசவாதம் என்பது ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றுவது. இந்த படத்தில் நாயகன் ஒரு காலத்தை இன்னொரு காலமாக மாற்றுகிறான்.

முழு படமும் கொடைக்கானலில் நடக்கிறது. இளமையும், அதே நேரத்தில் பக்குவமும் நிறைந்த ஒரு இளைஞர் படத்திற்கு தேவைப்பட்டார் அதனால் அர்ஜூன் தாஸை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். தன்யா ரவிச்சந்திரனும், ரேஷ்மா வெங்கடேசும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரம்யா சுப்ரமணியம் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். என்றார்.

மூலக்கதை