'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ்

  தினமலர்
லயன் கிங் அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ்

காட்டு ராஜாவான சிங்கத்தை மையமாக வைத்து உருவான படம் லயன் கிங். முதல் பாகம் 1994ம் ஆண்டு அனிமேஷன் படமாக வெளிவந்தது. இதே கதை இதே பெயரில் 2019ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தின் நாயகனான சிம்பா உலக குழந்தைகளின் செல்ல பிராணி ஆனது. சிம்பா பொம்மைகள் உலகம் முழுக்க விற்றுத் தீர்ந்தது.

இந்த நிலையில தற்போது லயன் கிங் வரிசையில் 'முபாசா : தி லயன்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சிம்பாவின் தந்தை முபாசாவின் வாழ்க்கை கதை இடம் பெறுகிறது. 'லயன் கிங்' கதையில் முபாசா சூழ்ச்சியால் கொல்லப்பட்டு விடுவார். பின்னர் சிம்பா ஆட்சிக்கு வருவார்.

இந்த படம் முபாசாவின் வீர தீர சாகசங்களை சொல்லப்போகிறது. அநாதையான முபாசா எப்படி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார் என்பதும், அதற்காக அவர் நடத்திய போராட்டங்கள், சந்தித்த துரோகங்கள்தான் திரைக்கதை. இப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் 'முபாசா: தி லயன் கிங்' படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

மூலக்கதை