பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன்

தினமலர்  தினமலர்
பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன்

தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு எல்லாம் தவறாமல் இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு ஹீரோவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒவ்வொரு படத்திலும் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்து விடுவதால் பிஸியாக இசையமைத்து வரும் தமன், தற்போது பிரபாஸ் நடித்து வரும் ராஜா ஸாப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். பொதுவாக பாடல்களை உருவாக்குவதற்காக வழக்கமாக பணியாற்றும் ஐதராபாத் சுற்றுப்பகுதி இடங்களுக்கோ அல்லது துபாய் போன்ற வெளிநாடுகளுக்கோ செல்வதுதான் தமனின் வழக்கம்.

ஆனால் இந்த முறை பாடல் கம்போசிங்கிற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ளாராம் தமன். இது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் மாருதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதும் ராதே ஷ்யாம் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை