'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை

தினமலர்  தினமலர்
சங்கமித்ரா படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க அறிவிக்கப்பட்ட படம் 'சங்கமித்ரா'. 2017ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளியானது. அடுத்த சில வாரங்களில் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பணிபுரிய இயலாது என படக்குழுவினர் அறிவித்தார்கள்.

அவருக்குப் பதிலாக ஹிந்திப் பட கதாநாயகி திஷா பதானி நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். ஏழு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் உள்ளது. படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நிதிச்சிக்கலில் சிக்கியதே இதற்குக் காரணம் என்றார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'சங்கமித்ரா' படம் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பமாகும் என படத்தின் இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்டபடி அதே நடிகர்கள், நடிகைகள் நடிப்பார்களா அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்பது படம் ஆரம்பமானால் தெரிய வரும்.

மூலக்கதை