விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ்

தினமலர்  தினமலர்
விரைவில் பாகுபலி அனிமேஷன் சீரிஸ்

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'பாகுபலி'. அதன் அனிமேஷன் தொடர் ஏற்கெனவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.

இந்நிலையில் இது பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். 'மகிழ்மதி மக்கள் அவருடைய பெயரை உச்சரிக்கும் போது பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அவர் திரும்பி வருவதைத் தடுக்க முடியாது. 'பாகுபலி - கிரௌன் ஆப் பிளட்', அனிமேஷன் சீரிஸ், விரைவில்,” என சிறிய வீடியோ ஒன்றுடன் பதிவிட்டுள்ளார்.

'பாகுபலி' படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு அனிமேஷன் தொடர் வெளிவர உள்ளது. படத்தைப் போலவே அதுவும் வரவேற்பைப் பெறுமா என்பது வெளிவந்த பிறகுதான் தெரியும்.

மூலக்கதை