தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு

தினமலர்  தினமலர்
தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் குபேரா குழு

தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று மே 2ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். படத்தின் டீசர்தான் வெளிவரப் போகிறது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தில் நடிக்கும் நாகார்ஜுனாவின் கதாபாத்திர முதல் போஸ்டர் வெளியாகும் என பின்னர் அறிவித்தார்கள்.

அதை இன்று நடைபெற உள்ள ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு சேனலில் வெளியிடப் போகிறார்கள். நாகார்ஜுனா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட உள்ளார்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திற்கு தெலுங்கில் முக்கியம் கொடுப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

மூலக்கதை