அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் "அக்னி-பிரைம்' என்ற புதிய தலைமுறை ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை செய்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பல சென்சார்களால் பெறப்பட்ட தரவுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டபடி, சோதனை அதன் நம்பகமான செயல்திறனைச் சரிபார்க்கும் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டிஆர்டிஓ) இணைந்து வியூகப் படை கட்டளை (எஸ்எப்சி) இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
