700 அடி ஆழத்தில் பூமிக்கடியில் புதைந்திருக்கும் பிரமாண்டக் கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.
பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அனைத்துக் கடல்களை விட 3 மடங்கு பெரிதான கடல் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நாம் வாழும் பூமிக்கு அங்கிருந்து தான் தண்ணீர் கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள எவன்ஸ்டன் நகரில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடல் தற்போது பூமியில் உள்ள அனைத்துக் கடல்களையும் ஒன்றிணைத்தால் இருக்கும் அளவை விட மிகப்பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கடியில் நிகழும் மாற்றங்கள்
அதாவது பூமியின் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து பல்கலைழக்கம் சார்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் தான் பூமியில் உள்ள கடலை விடப் பூமிக்கடியில் பெரிய நீராதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது பூமியில் உள்ள அனைத்துக் கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகச் சிறிய கோள்கள் என அழைக்கப்படும் வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதன் காரணமாகத் தண்ணீர் பூமியில் உருவானதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய இந்தக் கண்டுபிடிப்பு என்பது பூமியின் ஆழத்திலிருந்து பூமியில் தண்ணீர் தோன்றி இருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.
இதுபற்றி நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில், ‛‛ ‛‛நாம் வாழும் பூமிக்குத் தண்ணீர் எப்படி வந்தது? இதற்கான விடை என்பது பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.
பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களைப் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நில அதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தைப் பொறுத்து அதிர்வுகளின் அதிவேகம் என்பது மாறுபட்டது.
இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்லச் செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. இது தான் பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதைக் கண்டுபிடிக்க உதவியது' என்றார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
