70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
'வால் நட்சத்திரம்' என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன இந்த வால் நட்சத்திரங்கள் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.
ஒரு வால் நட்சத்திரமானது சூரியக் குடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது.
இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.
இனி 2095-ல் தான் தோன்றும்
சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியைக் கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனைப் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' வால்நட்சத்திரமானது 1385-ம் ஆண்டு சீனாவிலும், 1457-ம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095-ல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
