நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
நிலவில் பயணிப்பதற்கான ஊர்தியை வடிவமைக்க மூன்று நிறுவனங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா தேர்வு செய்துள்ளது.
நிலவில் இயங்கும் வாகனத்தை வடிவமைக்கும் பணி இன்டியூடிவ் மெஷின்ஸ், லுனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்டுரி ஆஸ்ட்ரோலேப் ஆகிய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் எனவும் நிலவின் மேற்பரப்பு குறித்து அதிகமாக அறிய உதவும் எனவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நிலவின் கடினமான சூழலைத் தாங்கும் திறன் கொண்டதாக இந்த வாகனம் இருக்க வேண்டும்.
ஆர்டிம்ஸ் 5 திட்டத்திலிருந்து பயன்படுத்தப்படும் வாகனத்தில் அதிநவீனத் தொழில்நுட்பங்களான தானியங்கி ஓட்டுநர் வசதி, ஆற்றல் மேலாண்மை, தொடர்பு மற்றும் வழிகாட்டி வசதிகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டியிருக்கும்.
இதற்காக 4.6 பில்லியன் அமெரிக்க டாலரை நாசா ஒதுக்கியுள்ளது. மூன்று நிறுவனங்களும் நாசாவின் தேவையை அறிந்து கொள்ள 1 ஆண்டு ஆய்வு செய்யவுள்ளன. அதன் பிறகு சோதனை திட்டத்தில் வாகனம் நிலவுக்கு அனுப்பப்படும் என நாசா தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
