கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொடருவதால் 27/03/2024 முதல் 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த வருடம் 2 மாதங்களுக்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
பல்வேறு பகுதிகளில் பல நாட்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக பாலக்காடு, கண்ணூர், புனலூர் உள்படப் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கேரளாவில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் தொழிலாளர்கள் வேலை பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் பொதுமக்கள் அதிக நேரம் நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது.ஆனால் அதன் பிறகும் வெப்பநிலை குறையவில்லை.
திருச்சூர் மாவட்டம் வெள்ளாணிக்கரை பகுதியில் அதிகபட்சமாக 39.9 டிகிரி செல்ஷியஸ் (103.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. பாலக்காடு மற்றும் புனலூரில் 39 டிகிரி செல்ஷியசும், கண்ணூர் விமானநிலையத்தில் 37.2 டிகிரி செல்ஷியசும், கோழிக்கோட்டில் 37 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை காணப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பாலக்காடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் உள்பட 11 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
