அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: தொடருது துக்கம்!

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: தொடருது துக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு (20) என்ற மாணவர் மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு(20) என்ற மாணவர் அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், அபிஜீத் பருச்சுரு அமெரிக்காவில் உள்ள வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலை எப்படி நடந்தது? யார் செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே மகன் உயிரிழந்த செய்தியை கேட்டு அபிஜீத் பருச்சுரு தாய் கவலை அடைந்துள்ளார். அபிஜீத் தனது தாயாரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றுள்ளார். அபிஜீத்தின் உடல், குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

தொடருது துக்கம்!

இந்த மாதம் துவக்கத்தில் கோல்கட்டாவை சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் என்பவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் நடப்பாண்டில் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கினர்.

வாஷிங்டன்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு (20) என்ற மாணவர் மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில்

மூலக்கதை