ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தினமலர்  தினமலர்
ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துபுதுடில்லி,ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வான விளாடிமிர் புடினுக்கு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவாயிலாக தீர்வு காண வலியுறுத்தினார்.

சமீபத்தில் நடந்த ரஷ்ய தேர்தலில், அந்நாட்டின் அதிபராக 5வது முறையாக விளாடிமிர் புடின் தேர்வானார். அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரஷ்யாவின் நட்புறவான மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக தன் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் மதிப்பாய்வு செய்தனர். ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்த விவாதத்தின்போது, பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

புதுடில்லி,ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வான விளாடிமிர் புடினுக்கு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவாயிலாக தீர்வு

மூலக்கதை