உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு: தொடர்ந்து முதலிடத்தில் பின்லாந்து
புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் பின்லாந்து தொடர்ந்து 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. டென்மார்க் 2ம் இடம், ஐஸ்லாந்து 3ம் இடம், இஸ்ரேல் 4ம் இடம் நெதர்லாந்து 5ம் இடமும், நார்வே 6-ம் இடம், லக்ஸம்பர்க் 7 சுவிட்சர்லாந்து 8-ம் இடம்,, ஆஸ்திரேலியா 9-ம் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் 126 வது இடத்தில் இந்தியா உள்ளது. சமூக ஆதரவு, நேர்மையான அரசாங்கம் ஆகியவை நல்வாழ்வுக்கு முக்கியம் என்பதே பல ஆண்டுகளாக உலக மகிழ்ச்சி அறிக்கை வலியுறுத்தும் பாடம் என அறிக்கையை தயாரித்தவர்கள் கூறியுள்ளனர்.
புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் பின்லாந்து தொடர்ந்து 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி