நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: பாகிஸ்தானில் 12 தொழிலாளர்கள் பரிதாப பலி

தினமலர்  தினமலர்
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: பாகிஸ்தானில் 12 தொழிலாளர்கள் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் சிக்கி, 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய்

மூலக்கதை