ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்
விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளைக் கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலைத் தற்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார்யாருக்கு என்னென்ன விருதுகள்
* தயான் சந்த் கேல் ரத்னா விருது - பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
* அர்ஜூனா விருது - வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
* விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது - லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).
விருது வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
