நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம்
நவம்பர் 3, திரைக்கு வரும் திரைப்படம் "லைசன்ஸ் " திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்..
பல கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் நடிகர்கர்களை நம்பி இயங்கும் சினிமா துறையில், கதைகளை நம்பி, புதிய முகங்களைக்கொண்டு களம் காணும் திரைப்படங்களும் வெற்றியடைவது மிகவும் அவசியம்.
நல்ல கதைகளை, நேர்த்தியாக சொல்லப்படம் படங்கள் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வெற்றியடைவதை தொடந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ஒரு பள்ளி ஆசிரியரை மையப்படுத்தி வரும் இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிடயடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இப்படத்தில் மக்களுக்கு அறிமுகமான மக்களிசைப் பாடகி ராஜலெட்சுமி செந்தில்கணேஷ் கதையை சுமந்து முக்கிய கதாபாத்திரத்தில் செல்கிறார். திரைப்படத்தில் அவரது நடிப்பு மிக அருமையாக வெளிப்பட்டுள்ளதை திரைப்படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறது. மேலும் ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வெளிவரும் இத்திரைப்படம் வரும் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வருகிறது.
இத்திரைப்படத்தை புதிய கதைகளை நேர்த்தியாக வெளிப்படுத்தும் இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். தொடர் எழுத்துப்பயணத்தில் மெருகேறிய வலிமைமிகு வரிகளால் வலுசேர்த்துள்ளார் எழுத்தாளர் ரமணிகாந்தன்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தம், ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன், இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப் .
வரும் நவம்பர் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்..




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
